News Friday, April 3, 2020 - 17:29
Submitted by nagapattinam on Fri, 2020-04-03 17:29
Select District:
News Items:
Regional Description:
N-95 முகக் கவசம் என்பது காற்றில் இருக்கும் 95% நுண் துகள்களை வடிகட்டக்கூடியது. இது 0.3 மைக்ரான் அளவுள்ள துகள்களையும் வடிகட்டும் என்பதால் புளு, கரோனா போன்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு தருவது. ஆகவே, கரோனா தடுப்புக்கு தற்போது இந்த வகை முகக் கவசங்களைத்தான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதே சமயம் கவசத்தை விட சமூக விலகவே முக்கியம், நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால் முகக் கவசம் அணியவே தேவையில்லை. ஏற்கனவே சொன்னதுபோல, N-95 முகக் கவசம்தான் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் மற்ற ரகங்கள் பயன்படுத்துவது வீண். அவை பாதுகாப்பு தராது. பதிலாக, கரோனா வைரஸ் கிருமிகளை வீட்டுக்கு கொண்டுவந்துவிடும் எப்படி என்றால், முகக் கவசம் அணிந்துதிருக்கும் தைரியத்தில் நீங்கள் அடிக்கடி வெளியே சென்றுவருவீர்கள். ஒருவேளை, செல்லும் இடங்களில் கரோனா இருந்தால் அவை நீங்கள் அணிந்திருக்கும் முகக் கவசத்தில் ஒட்டிகொண்டு உங்கள் மூக்கு வழியாக நுரையீரலுக்கு உள்ளே செல்லக்கூடும். அதனால், ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள். வெளியே சென்றால் மற்றவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தூரம் தள்ளி இருப்பது மட்டுமே கரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றும். முகக் கவசத்தைவிட அதுதான் மிக முக்கியம்.