News Saturday, January 21, 2017 - 09:21

Select District: 
News Items: 
Description: 
The new power line to the houses of the State seeking to apply the new system introduced by E Service centers. Low pressure in the low state (for the use of housing), new electrical connection, additional eletricity or apply for services through the website, including the reduction of electricity registration system is in effect. Furthermore, the high pressure of new power lines, in addition to reducing electricity or applying through the internet in order to receive the services, recently expanded this service. In this case, the low for the use of lower pressure of those seeking new electrical connection, the State can apply by E Service centers.
Regional Description: 
வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தமிழக அரசின் இ -சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த தாழ்வு அழுத்த (வீடுகளின் பயன்பாட்டுக்கான) புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மேலும், உயர் அழுத்த புதிய மின் இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், வீடுகளின் பயன்பாட்டுக்கான குறைந்த தாழ்வு அழுத்த புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், தமிழக அரசின் இ -சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே உள்ளது போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.