News Friday, January 20, 2017 - 08:38

Select District: 
News Items: 
Description: 
Consumers "mopikesh," a new operator BSNL SBI combined introduced. Simple, web-enabled mobile phone customers in the ease of application in 5 minutes can be downloaded. So, downloaded the processor by the SBI, including the bank account, this new processor is the cash balance and can create. I use it, BSNL customers all payments. Similarly, BSNL Telecom retail trade stores, processor holdings depending Rs 500, Rs 1000 rate of money can be obtained. Similarly, transfer payments, ticketing, cinema, electricity, phone, including the fees payments, mobile top-up to be used. thus, Perform simple camaniyarkalum rokkamilla transaction. The BSNL mobile number of customers, and the processor Account (User ID), used to keep secret in OTP number. Thus, customers will be security processor. For more information on this topic in different 18004253800, 1800112211 contact the toll-free numbers. Similarly, we also contact the respective customer service center, learn the details through the BSNL website.
Regional Description: 
வாடிக்கையாளர்களுக்கென "மொபிகேஷ்' எனும் புதிய செயலியை பிஎஸ்என்எல் எஸ்பிஐ இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண, இணையதள வசதி கொண்ட செல்லிடப்பேசியில் வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் செயலியை 5 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன்மூலம், பதிவிறக்கப்பட்ட செயலி மூலம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கி கணக்கிலிருந்து, இந்த புதிய செயலிக்கு பண இருப்பு ஏற்படுத்திக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அனைத்துவிதமான கட்டணத்தையும் செலுத்தலாம். அதுபோல், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சில்லறை வர்த்தக கடைகளில், செயலி இருப்பைப் பொறுத்து ரூ.500, ரூ.1000 வீதம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுபோல், பணப்பரிமாற்றம், பயணச்சீட்டு, சினிமா, மின்சார, செல்லிடப்பேசி உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துவதற்கும், செல்லிடப்பேசி டாப்-அப் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், சாமானியர்களும் எளிமையான முறையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணையே, செயலி கணக்குஎண்ணாகவும் (யூசர் ஐடி), ரகசிய எண்ணாக ஓடிபி எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு செயலியாக அமையும். இதுகுறித்த மேலும் பல்வேறு தகவல்களுக்கு 18004253800, 1800112211 உள்ளிட்ட கட்டணமில்லா எண்களில் தொடர்புகொள்ளலாம். அதுபோல, அந்தந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், பிஎஸ்என்எல் இணையதளத்தின் வாயிலாகவும் விவரங்கள் அறிந்துகொள்ளலாம்