News Thursday, January 12, 2017 - 12:54

Select District: 
News Items: 
Description: 
Plus 2 students scoring high in terms of biology, online, 'tips' is a private school teacher, has served for free. In Tamil Nadu, according to current procedures, medical study, plus 2, the need to get the highest score; In fact, getting high marks in biology, is vital. Agricultural studies, animal studies, biology is important marks. In this case, to understand students studying biology lesson, and get high marks for convenience, Chennai, puracaivakkam, emciti, Muttiah Chettiar's secondary school teacher, cavuntara Pandian, to students online, free training lessons alikkirarmukkiya, plants, the scientific names of animals, in order to receive a high score, answers to the writing process, a number of information, "Watts App, Facebook 'and that rspbiology@gmail.com, e - mail, by sharing is free of charge
Regional Description: 
பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், 'டிப்ஸ்' வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார். தமிழகத்தில், தற்போதைய நடைமுறைகளின் படி, மருத்துவம் படிக்க, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; அதிலும், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறுவது, மிக அவசியம். வேளாண் படிப்பு, விலங்கியல் படிப்புக்கும், உயிரியல் மதிப்பெண்கள் முக்கியம். இந்நிலையில், உயிரியல் பாடத்தை மாணவர்கள் புரிந்து படித்து, அதிக மதிப்பெண்கள் பெற வசதியாக, சென்னை, புரசைவாக்கம், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர், சவுந்தர பாண்டியன், ஆன்லைனில் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கிறார்.முக்கிய பாடங்கள், தாவரங்கள், விலங்குகளின் அறிவியல் பெயர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், விடைகளை எழுதும் முறை என, பல தகவல்களை, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும் rspbiology@gmail.com என்ற, இ - மெயில் மூலமும், இலவசமாக பகிர்ந்து வருகிறார்.