News Wednesday, January 4, 2017 - 10:49

Select District: 
News Items: 
Description: 
Cooking, 'cause' rates per cylinder, an online payments by customers for cylinder, will be written off for the rupee, Union Government said. Invalid bill after notification of the federal government, "pankkukal petrol, the petrol and diesel filling customers electronically for payment, a rebate of 0.75 per cent as oil companies announced. In this case, the public sector oil firms Indian Oil Corporation, Bharat Petroleum and Hindustan Petroleum, LPG cylinder announced special offer for customers. Accordingly, gauze cylinder customers to book online, through online payment of the appropriate amount per cylinder, as five rupees discount offered, the companies reported; This transaction also will encourage panamarra, oil companies have expressed optimism.
Regional Description: 
சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், 'பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளன. இதன்படி, காஸ் சிலிண்டரை ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே அதற்கான தொகையை செலுத்தினால் சிலிண்டருக்கான விலையில், ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இது, பணமற்ற பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.