News Monday, January 2, 2017 - 08:24

Select District: 
News Items: 
Regional Description: 
கடற்குதிரை என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். பிற மீன்களைப் போலவே இதற்கும், செவுள்களும், துடுப்புகளும் உள்ளன. எனினும் இது மீனைப் போல் வடிவம் கொண்டதன்று.தலைப்பகுதி குதிரையைப் போன்று இருப்பதால் இது கடல் குதிரை என்றழைக்கப்படுகிறது. கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது.