News Saturday, December 31, 2016 - 10:41

Select District: 
News Items: 
Regional Description: 
சிற்றாமை ..இவை எல்லா வெப்ப மண்டல பகுதிகளிலும் வாழக்கூடியவை. கடல்படுகைகளில் புதைந்து கிடக்கும் நண்டு, நத்தைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் தரையைக் கிளறி, அதன் அடியில் புதைந்து கிடக்கும் பிராணவாயுவை வெளியேற வைக்கின்றன. இவ்வாறு கடல் நலத்தை பராமரிக்க உதவி செய்வதுடன் நமக்கு சுவாசிக்க காற்றையும் அளிக்கின்றன... நம்மோட கடற்பகுதிகள் இந்த ஆமைகளுக்கு இரை தேடவும், இணை சேரவும் தகுந்த இடமா விளங்குவதோடு, ஒரிஸாவில் இருக்கிற முட்டைஇடும் கடற்பகுதிகளுக்கு லட்சக் கணக்கான சிற்றாமைகள் புலம் பெயரும் முக்கியப் பாதைகளாகவும் அமைஞ்சிருக்கு. இந்த கடற்பகுதிகள் இளம் பேராமைகளுக்கும், இளம் கழுகு மூக்கு ஆமைகளுக்கும் முக்கியமான இரை அளிக்கும் பகுதிகளாகவும் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் மீன்பிடிக்கும் முறைகளால ஆயிரக்கணக்கான ஆமைகள் தற்செயலாகவோ, பிடிபட்டோ, கொல்லப்பட்டோ கடற்கரைகள்ல ஒதுங்குது. சிற்றாமைகள் கடலுக்கும் நிலத்துக்கும் இணைப்பாக விளங்கக்கூடியவை. பாதுகாப்பான பிரசவத்துக்காக தனது தாய் வீட்டைத் தேடி வரும் மகளைப் போல பெண் கடலாமைகள் முட்டையிட தாங்கள் பிறந்த அதே கடற்கரைப் பகுதிக்கு மறுபடியும் வந்து சேரும். பெண் கடலாமை நள்ளிரவு நேரத்துல கடற்கரை மணலுக்கு வந்து அங்கே ஒரு பானை வடிவில் குழி தோண்டி அதில் தன்னுடைய முட்டைகளை இடும். ஒரு நேரத்தில் 60 முதல் 150 முட்டைகள் வரை இடுகிறது. முட்டையிடும் பருவமான ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அவை இரண்டி லிருந்து 4 முறை வந்து முட்டையிடும். இப்படி மணல்பரப்பில் வந்து முட்டையிடறதால, அவை வளமற்ற கடற்கரைக்கு வளமான கடலிலிருந்து ஊட்டச்சத்துகளை கொண்டு சேர்க்கிற காரணியாவும் விளங்குகின்றன. உண்மையில் கடலிலிருந்து ஊட்டச்சத்துகளை கடற்கரைக்கு கொண்டு வரும் முக்கிய காரணியாக விளங்குவது கடல் ஆமைகள் மட்டுமே. பிறகு அந்த பெண் ஆமை கடலுக்குள்ளே மறைஞ்சிடும். அப்புறம் 48லிருந்து 52 நாட்களுக்குள் ஒவ்வொரு குழியிலேருந்தும் பொரிந்த ஆமைக்குஞ்சுகள் மணற்குழிகள்லேருந்து வெளியில் வரும். அவை நிலா மற்றும் நட்சத்திர வெளிச்சத்தால மின்னும் கடலலைகளை வச்சே கடலுக்குள்ள வழிநடத்தி செல்லப்படும். கடலுக்குள்ளே ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் போனா, அதுல ஒண்ணு மட்டும்தான் பெரிசா வளரும் வகையில உயிர் பிழைக்கிறதா விஞ்ஞானிகள் நம்பறாங்க. மற்ற 999 ஆமைக் குஞ்சுகள் பல பெரிய கடல்வாழ் உயிரிகளுக்கு இரையாகின்றன