News Thursday, May 30, 2019 - 12:34

News Items: 
Description: 
Fishing harbor maintenance - With two thirds of the world being partially surrounded by sea, all kinds of waste materials, such as plant discharges, human waste, and sewers, take refuge in the sea. Fisheries port operations also play a major role in marine pollution. Hence the activities in the fishing harbor are a duty to save the sea. The reason for contamination is: 1. The untreated sewage mixed in most places of the waste water ports, creating a large epidemic and crude. 2. Mercury, cadmium, chromium and other heavy metals are mixed in the ocean and they go to the food chain and participate in the fish we eat. Due to these fish, heavy metals are causing various disorders in our body. 3. Boating engine oil, diesel, grease, etc. are mixed in the sea.
Regional Description: 
மீன்பிடி துறைமுக பராமரிப்பு - உலகின் மூன்றில் இரண்டு பாகம் கடலால் சூழப்பட்ட நீர் பகுதியாய் இருப்பதால், நிலத்திலிருந்து போகும் ஆலைக்கழிவுகள் , மனித கழிவுகள் , சாக்கடைகள் போன்ற எல்லா கழிவு பொருட்களும் கடலில் தான் தஞ்சம் புகுகின்றன. கடல் மாசுபடுவதில் மீன்பிடி துறைமுக நடவடிக்கைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் கடலை மாசுபடுத்தாமல் காக்கும் கடமை நமக்கிருக்கிறது. மாசுற்ற நிலைக்கு காரணம்: 1. சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர் துறைமுகத்தின் பெரும்பாலான இடங்களில் கலந்து,பெரும் தொற்றுநோய் மற்றும் தரச்சீர்கேட்டை உருவாக்குகின்றன. 2. மெர்குரி, காட்மியம், குரோமியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட கழிவுகள் கடலில் கலப்பதால் , அவை உணவு சங்கிலியில் சென்று நாம் உண்ணும் மீனில் கலந்து விடுகிறது. இந்த மீன்களை உண்பதால் கன உலோகங்கள் நமது உடல் செயலில் பலவித கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 3. படகு எஞ்ஜின் எண்ணெய் , டீசல், கிரீஸ் முதலியன கடலில் கலந்து மாசுபடுத்துகின்றன.