You are here
Disaster Alerts 29/04/2019
State:
Tamil Nadu
Message:
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள பானி (FONI) புயல் மணிக்கு 4 கி .மீ வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து திருகோணமலைக்கு 620கி.மீ, சென்னைக்கு 880 கி.மீ , மச்சிலிப்பட்டினத்துக்கு 1050 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரத்தில் தீவிரபுயலாக மாறி , அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும். இது மே 1 ஆம் தேதி மாலை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடகிழக்கு திசையில் திசை மாறி நகர்ந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள பானி (FONI) புயல் மணிக்கு 4 கி .மீ வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து திருகோணமலைக்கு 620கி.மீ, சென்னைக்கு 880 கி.மீ , மச்சிலிப்பட்டினத்துக்கு 1050 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரத்தில் தீவிரபுயலாக மாறி , அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும். இது மே 1 ஆம் தேதி மாலை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடகிழக்கு திசையில் திசை மாறி நகர்ந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.
மீனவர்களுக்கான கடல் காலநிலை குறித்த எச்சரிக்கை
ஆழ்கடல் காற்று
29.4.2019: சுழல் காற்று மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் தென் வங்கக்கடல் மற்றும் கடல் பகுதிகளில் வீசக்கூடும்.30.4.2019 காலை முதல் : சுழல் காற்று மணிக்கு 120-130 கி.மீ அதிகபட்சமாக 145 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 01.5.2019 மாலை முதல் : சுழல் காற்று மணிக்கு 160-170 கி.மீ அதிகபட்சமாக 185 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா உள் கடல் பகுதிகளில் வீசக்கூடும். .
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்
ஏப்ரல் 30 ஆம் தேதி காலையில் முதல் சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்திலும், அதன் பின்னர் மே 1 ஆம் தேதி காற்று படிப்படியாக அதிகரித்து மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
பேரலை மற்றும் கடல் கொந்தளிப்பு
வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் கடல் சீற்றத்துடனும், மே 1 ஆம் அதிக சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தற்போதய நிலவரம். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் தங்களுக்கு விரிவான அறிக்கை எம் .எஸ் .சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ நண்பன் செயலில் தகவல் மேம்படுத்தப்படும்