You are here
Disaster Alerts 27/04/2019
State:
Tamil Nadu
Message:
கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி .மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து திருகோணமலைக்கு 1090 கி.மீ, சென்னைக்கு 1440 கி.மீ , மச்சிலிப்பட்டினத்துக்கு 1720 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று மாலை புயலாகவும் நாளை இரவு தீவிரபுயலாக மாறி ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்படுகிறது.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி .மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து திருகோணமலைக்கு 1090 கி.மீ, சென்னைக்கு 1440 கி.மீ , மச்சிலிப்பட்டினத்துக்கு 1720 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று மாலை புயலாகவும் நாளை இரவு தீவிரபுயலாக மாறி ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்படுகிறது.
மீனவர்களுக்கான கடல் காலநிலை குறித்த எச்சரிக்கை
(i) பேரலை மற்றும் கடல் கொந்தளிப்பு
புதுக்கோட்டை, தஞ்சாவூர் : ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3 முதல் 5 அடி வரையும் அதிகபட்சமாக 8 அடி வரை எழக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
நாகப்பட்டினம், காரைக்கால் : ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3 முதல் 5 அடி வரையும் அதிகபட்சமாக 11 அடி வரை எழக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
கடலூர், பாண்டிச்சேரி : ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3 முதல் 6 அடி வரையும் அதிகபட்சமாக 12 அடி வரை எழக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
காஞ்சிபுரம் : ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3 முதல் 7 அடி வரையும் அதிகபட்சமாக 14 அடி வரை எழக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
சென்னை : ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3 முதல் 8 அடி வரையும் அதிகபட்சமாக 16 அடி வரை எழக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
உள்கடல் காற்று
27.4.2019 :சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
28.4.2019 : சுழல் காற்று மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
29.4.2019 : சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 115 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி உள்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்
ஏப்ரல் 28 ஆம் தேதி காலையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 30-40 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி மாலையிலிருந்து வீசக்கூடும்.
இது மேலும் அதிகரித்து 29 ஆம் தேதி காலையில் மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 50-60கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அதன் பின்னர் 30 ஆம் தேதி மதியம் காற்று படிப்படியாக அதிகரித்து மணிக்கு 90-100கி.மீ அதிகபட்சமாக 115 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் கவனத்துடனும் , தகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாள்கள் .
இது தற்போதய நிலவரம். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் தங்களுக்கு விரிவான அறிக்கை தமிழில் எம் .எஸ் .சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ நண்பன் செயலி மூலமாக தெரிவிக்கப்படும்.