Disaster Alerts 26/04/2019

State: 
Tamil Nadu
Message: 
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 27-28 தேதிகளில் புயலாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 27-28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்படுகிறது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 27-28 தேதிகளில் புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வடதமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 27-28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்படுகிறது. கடல் கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் காணப்படும் இதன் காரணமாக 25.4.2019 அன்று மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 35-45 கி .மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். இது 26.4.2016 அன்றும் தொடர்ந்து மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். தொடர்ச்சியாக 27.4.2019 அன்றும் மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 65-75 கி .மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதி கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 28.4.2019 சுழல் காற்று மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் அதையொட்டிய மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வீசக்கூடும். 29.4.2019 சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகப்படியாக 115 கி.மீ வேகத்தில் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் கடலுக்கு செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்