News Saturday, December 24, 2016 - 13:29

Select District: 
News Items: 
Regional Description: 
தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் கடற்பசு, கடற்குதிரைகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள், கடல் அட்டைகள் உட்பட மூவாயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.வனத் துறையினர், இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தேசியக் கடல்வாழ் உயிரினப் பகுதியாக அறிவித்துக் கண்காணித்துவருகிறார்கள். அரிய வகை கடல் வாழ் உயிரினங்களைப் பிடிப்பவர்களுக்கு அபராதமும் ஏழாண்டுச் சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றன.