Government Schemes- Monday, March 30, 2020 - 17:03
Regional Title:
அண்டை நாடுகளில் சிறை வைக்கப்படும் மீனவரின் குடும்பத்திற்கு தின உதவித் தொகை வழங்குதல்
Description:
மீன்பிடிப்பின் போது பிறநாட்டினரால் கைது செய்யப்படும் மீனவரின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் கைதான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாளிலிருந்து அண்டை நாட்டில் கைது செய்து காவலில் வைக்கப்பட்டு தாயகம் திரும்பும்வரை (இரு தினங்கள் நீங்கலாக) அவர்களின் குடும்பத்திற்கு, நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் தின உதவித் தொகை பெறுவதற்குரிய தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் வழங்கப்படுகிறது (கைது செய்யப்படும் நாள் மற்றும் திரும்பும் நாள் நீங்கலாக). தொடர்புக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அணுகவும்
State: