News Thursday, December 15, 2016 - 11:09

Select District: 
News Items: 
Description: 
Communication, advance understanding of climate, the Indian Space Research Organization 'INSAT -3 TR' designed by the weather satellites. The satellite was developed indigenously. Cryogenics, designed to operate under any circumstances, including heat. 'INSAT -3 TR' weather satellite on September 8 vinnirku inspired by ISRO, has successfully deployed. TR -3 INSAT satellite, marine traffic regulation, notifying unforeseeable weather changes, natural disasters and outrages notifying the sea, providing the necessary information to the Army, road traffic monitoring, information on land, geological survey, it was reported that the process to include military research. 2 batteries of the satellite capacity of 1,700 watts, 2 modern aircraft cameras, tiranspantarkal and modern equipment installed for the rescue and search work. Its lifespan is 10 years. Climate-related analyzes 'skatcat -1', the satellite was sent on September 26. Weather forecast was informed that the information can be obtained by the satellite. ISRO's INSAT TR -3 'and' skatcat -1 "Information received from satellites to predict the motion of the storm is doing to help, were able to warn the public that the authorities kuriullar ISRO official. 'INSAT TR -3' and 'skatcat -1' According to the information received from satellite and Chennai, Tiruvallur and Kancheepuram districts, more than 10 thousand people were rescued. It saved many coastal Andhra Pradesh
Regional Description: 
தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘இன்சாட்–3டிஆர்’ என்ற வானிலை செயற்கைகோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. கடுங்குளிர், வெப்பம் உள்ளிட்ட எந்த சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ‘இன்சாட்–3டிஆர்’ வானிலை செயற்கைகோள் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இஸ்ரோவால் விண்ணிற்கு ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இன்சாட்–3டிஆர் செயற்கை கோள், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், வானிலை மாற்றங்களை முன்கூட்டி அறிவிப்பது, கடலில் இயற்கை பேரிடர் மற்றும் சீற்றங்களை அறிவிப்பது, ராணுவத்துக்கு தேவையான தகவல்களை அளிப்பது, சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, ராணுவ ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த செயற்கை கோளில் 1.700 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 நவீன ரக கேமராக்கள், மீட்பு மற்றும் தேடும் பணிக்கான டிராண்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக ‘ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் செப்டம்பர் 26-ம் தேதி அனுப்பப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும் என்று தெரிவிக்கப்பட்டது. இஸ்ரோவின் ‘இன்சாட்-3டிஆர்’ மற்றும் ‘ஸ்காட்சாட்-1’ செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் புயலின் நகர்வை கணிப்பதற்கு உதவி செய்து உள்ளது, பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்க முடிந்தது என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார். ‘இன்சாட்-3டிஆர்’ மற்றும் ‘ஸ்காட்சாட்-1’ செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டனர். இது கடலோர ஆந்திராவிலும் பலர் காப்பாற்றப்பட்டனர் என்று அதிகாரி கூறிஉள்ளார்