News Wednesday, December 14, 2016 - 06:32
Submitted by pondi on Wed, 2016-12-14 06:32
Select District:
News Items:
Description:
List of North Indian Ocean, India, Pakistan, Bangladesh, Maldives, Yemen, Myanmar, Sri Lanka and Thailand are represented. On behalf of these countries, in 2014, each country, each with eight percent, 64 names have been registered. So far, 46 names used for storms that form in the Indian Ocean ullanavata, English letters, A, B, C, in alphabetical order, first of all, the name of Bangladesh Bangladesh will be provided. Then, respectively, India, Maldives, Myanmar, Oman, Pakistan, Sri Lanka, finally, the last storm of the past year to be the name of the Kingdom of Thailand, India provided, 'Make', a cloud was named.
This year, the South-West monsoon season in May, formed the first storm, Maldives set, 'ronu "the cuttappattatutotarntu, the current Northeast monsoon period established in the first cyclone in Myanmar, the' MON 'in crocodile, in the sense of,' kiyant the named . The storm hit Myanmar. Then, Nov., 29, emerged for the next storm, Oman provided by the country, 'Nada', the Arabic language is named.
This means that the blessed rain. The storm, Dec., 1, crossed the coast near Karaikal, Tamil Nadu, Kerala and Karnataka with widespread rainfall, according to the name of the blessed rain, in the Arabian Sea tancamanatuatanp the appellation, rutratantavam scored yesterday, "varta" storm. Pakistan tribute to the name, in Arabic, 'rose' that means. This, Dec., 6, forming a border crossing 12. In the Indian Ocean, the storm in the form, Sri Lanka's' maruta the name has been chosen. On behalf of India, the 50th name, the sea, which means, 'Sagar'; In the name of 58, which means that wind, 'gas', the Hindi names have been recorded
Regional Description:
வட இந்திய பெருங்கடலின் பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, ஏமன், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் சார்பில், 2014ல், ஒவ்வொரு நாடும், தலா எட்டு வீதம், 64 பெயர்களை பதிவு செய்துள்ளன. இதுவரை, 46 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, ஆங்கில எழுத்துகளின், ஏ, பி, சி, அகர வரிசையில், முதலில், பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும். பின், முறையே இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, கடைசியில், தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் வைக்கப்படும் கடந்த ஆண்டின் கடைசி புயலுக்கு, இந்தியா வழங்கிய, 'மேக்' என்ற, மேகம் பெயர் வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, தென் மேற்கு பருவமழை காலத்தில், மே மாதம் உருவான முதல் புயலுக்கு, மாலத்தீவு வைத்த, 'ரோனு' என்ற பெயர் சூட்டப்பட்டது.தொடர்ந்து, நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு மியான்மரின், 'மொன்' மொழியில், முதலை என்ற பொருளில், 'கியான்ட்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், மியான்மரை தாக்கியது. பின், நவ., 29ல், உருவான அடுத்த புயலுக்கு, ஓமன் நாடு வழங்கிய, 'நடா' என்ற அரபி மொழி பெயர் வைக்கப்பட்டது.
இதற்கு, ஆசீர்வதிக்கப்பட்ட மழைத்துளி என்று பொருள். இந்த புயல், டிச., 1ல், காரைக்கால் அருகே கரையை கடந்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பரவலாக மழையை கொடுத்து, பெயருக்கு ஏற்ப ஆசீர்வதிக்கப்பட்ட மழையாய், அரபிக்கடலில் தஞ்சமானது.அதன்பின் உருவானதே, நேற்று முன்தினம் ருத்ரதாண்டவம் ஆடிய, 'வர்தா' புயல். பாகிஸ்தான் சூட்டிய இந்த பெயருக்கு, அரபி மொழியில், 'ரோஜா மலர்' என, அர்த்தம். இது, டிச., 6ல் உருவாகி, 12ல் கரையை கடந்தது. இந்திய பெருங்கடலில், அடுத்து உருவாக உள்ள புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'மாருதா' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில், 50வது பெயராக, கடல் என, பொருள்படும், 'சாகர்'; 58வது பெயராக, காற்று என்ற அர்த்தம் தரும், 'வாயு' என்ற, இந்தி பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன