News Tuesday, December 13, 2016 - 11:35

Select District: 
News Items: 
Regional Description: 
கடலில் வாழும் பெரியவொரு ஆமை இனம் இந்த பச்சைக் கடல் ஆமை. ஆமை ஓட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பச்சை நிறக் கொழுப்புப் பகுதியாகும். இதனது ஓடு பழுப்பு நிறமானது. இந்த பச்சைக் கடல் ஆமையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அட்லாண்டிக் கடலில் வாழும் பச்சை ஆமைகள், மற்றவை கிழக்கு பசுபிக் கடற்பகுதியில் வாழும் பச்சை ஆமைகள். 318 கிலோகிராம் வரை நிறையுள்ள வளர்ந்த பச்சை ஆமை, கடலில் வாழும் ஆமை இனங்களில் மிகப்பெரியதாகும். உடலின் அளவோடு ஒப்பிடும் போது தலையின் அளவு மிகச்சிறியதாகும், மற்றும் சாதாரண ஆமைகளைப் போல தனது ஆமை ஓட்டினுள் தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும் திறன் இந்த பச்சை ஆமைகளுக்கு இல்லை. இதனது இதய வடிவான ஆமை ஓடு 5 அடி அல்லது 1.5 மீட்டார் வரை இருக்கும். 80 ஆண்டுகளுக்கு மேல் வரை உயிர்வாழும்.ஆண் பச்சை ஆமைகள் பெண் ஆமைகளை விட சற்றுப் பெரிதாக இருக்கும். மற்றும் ஆணின் வாலும் சற்று நீளமாக இருக்கும். பெரிய துடுப்புகள் போன்ற இருபுறமும் அமைந்த அமைப்பு இந்த ஆமைகள் வினைத்திறனுடன் நீந்த உதவுகிறது.வளர்ந்த பச்சை ஆமைகள் தாவர உண்ணிகளாகும். இவை கடற்புல் மற்றும் பாசி போன்றவற்றை உண்கின்றன. ஆனால் சிறிய பச்சை ஆமைகள், சிறிய நண்டுகள், ஜெல்லிமீன் மற்றும் கடல் பஞ்சு போன்றவற்றையும் உண்கின்றன.பொதுவாக கடல் ஆமைகள் தங்கள் உடலை சூடாக வைத்திருப்பதற்கு ஆழமற்ற நீரின் மேற்பகுதியில் நீந்தும். ஆனால் இந்த பச்சை ஆமைகள், அதுவும் பொதுவாக கிழக்கு பசுபிக் கடல் ஆமைகள், நிலத்திற்கு அதாவது கடற்கரைக்கு வந்து சூரியக்குளியல் செய்யும்!