You are here
Disaster Alerts 13/12/2018
State:
Tamil Nadu
Message:
டிசம்பர் 13 2018 : மதியம் 2.30 மணி : தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 6 மணி நேரமாக latitude 6.8°N and longitude 88.5°E இலங்கை திருகோணமலைக்கு தென்கிழக்கே 820 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 1140 கி .மீ தென்கிழக்கு திசையிலும் ஆந்திரா மச்சில்லிபட்டினத்திற்கு 1310 கி.மீ தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறும் . இது ஆந்திர கடற்பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 72 மணி நேரத்தில் நகரும் என கணிக்கப்படுகிறது .
தமிழக ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கான பேரலை எச்சரிக்கை
ஆந்திரா :
பேரலைகள் 10முதல் 16 அடி வரை டிசம்பர் 15.12.2018 முதல் 17.12.2018 வரை ஆந்திரா மாநிலம் துர்க்கராஜபட்டினம் முதல் பரூவா ) கடற்கரை பகுதிகளில் எழக்கூடும் . கடல் நீரோட்டம் வினாடிக்கு 160-190 செ .மீ வேகத்தில் காணப்படும்.
தமிழ்நாடு
பேரலைகள் 8 முதல் 14 அடி வரை டிசம்பர் 15.12.2018 முதல் 16.12.2018 வரை வட தமிழகத்திலும் , தனுசுகோடி கடற்கரை பகுதிகளிலும் எழக்கூடும் . கடல் நீரோட்டம் வினாடிக்கு 90-120 செ .மீ வேகத்தில் காணப்படும்.
ஆழ்கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ள இடத்தை ஒட்டியபகுதிகளில் (6.8°N, 88.5°E; 1140 km southeast of Chennai, Tamil Nadu coast).பேரலைகள் 10 முதல் 11 அடி வரை டிசம்பர் 13.12.2018 தேதியில் எழக்கூடும் . கடல் நீரோட்டம் வினாடிக்கு 40-80 செ .மீ வேகத்தில் காணப்படும்.10-11
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வரை மத்திய வங்க கடல் மற்றும் அதை நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கும், 14 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு 15 ஆம் தேதி வரையிலும், அதையொட்டிய மேற்கு மத்திய வங்க கடல்பகுதிக்கு, 16ஆம் தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்பவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
காற்றின் வேகம்
13.12.2018 :
மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று - மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் வீசக்கூடும்.
14.12.2018 :மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
15.12.2018 : காலை மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் கடலோர ஆந்திரா ஆழ்கடல் பகுதிகளிலும், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் வீசக்கூடும். சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 110கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
16.12.2018: சுழல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
கடலோர ஆந்திரா ஆழ்கடல் பகுதிகளிலும் மற்றும் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் வீசக்கூடும்.மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
16.12.2018. மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் கடலோர ஆந்திரா பகுதிகளில் வீசக்கூடும்.இது படிப்படியாக உயர்ந்து சுழல் காற்றாக மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வீசக்கூடும். தமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் கடல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கடல் வானிலை நிலவரம் ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது . எனவே தொடர்ந்து எச்சரிக்கை செய்திகளை கவனிக்கவும்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: