Disaster Alerts 12/12/2018

State: 
Tamil Nadu
Message: 
டிசம்பர் 12 2018 : இரவு 8 மணி : நடுநிலைகோட்டு இந்திய பெருங்கடல் அதையொட்டியுள்ள தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் அதற்கடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் வலுபெறக்கூடும். மேலும் இது வலுப்பெற்று தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வடதமிழகம் நோக்கி நகரக்கூடும். எனவே ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் வானிலை நிலவரம் ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது . எனவே தொடர்ந்து எச்சரிக்கை செய்திகளை கவனிக்கவும் பேரலை எச்சரிக்கை பேரலைகள் 8 முதல் 14அடி வரை 14.12.2018 -16.12.2018 வரை தமிழகத்தில் (திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் மற்றும் தனுசுகோடி ) கடற்கரை பகுதிகளில் எழக்கூடும் . கடல் நீரோட்டம் வினாடிக்கு 90-120 செ .மீ வேகத்தில் காணப்படும். காற்றின் வேகம் 12.12.2018 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று - மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் வீசக்கூடும். 13.12.2018 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று - மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் வீசக்கூடும். 14.12.2018 :மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 15.12.2018 :மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 16.12.2018. மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வீசக்கூடும். மழை எச்சரிக்கை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஓரிரு இடங்களில் டிசம்பர் 15-16ஆம் தேதிகளில் பெய்யக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 