டிசம்பர் 10 2018 : தென்கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . இது மெல்ல தீவிரமடைந்து டிசம்பர் 12 ஆம் தேதி குறைந்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 13 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 15 ஆம் தேதி காலை பெயிட்டி புயலாக தமிழகத்தை நெருங்கி நெல்லூர் மற்றும் நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி டிசம்பர் 12-15 தேதிகளில் திருவள்ளுவர் முதல் நாகப்பட்டினம் வரை கனமழைக்கு வாய்ப்பு. கடல் சீற்றத்துடன் காணப்படும்.
புயல் உருவான பின் காற்றின் வேகம், திசை, ஆகியவற்றை பொறுத்து கடக்கும் இடமும், நாளும் மாறலாம்.
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமெனவும், கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்