வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான வர்தா புயல் காரணமாக இன்று காலை முதல் நாளை 12ஆம் தேதி இரவு 11 மணி வரை வட தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் முதல் பழவேற்காடு வரை பேரலைகள் 10 முதல் 12 அடி உயரத்திற்கும் , தென் தமிழ்நாட்டில் கீழக்கரை முதல் குளச்சல் வரை 8 முதல் 9 அடி உயரத்திற்கும் பேரலைகள் இருக்கும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான வர்தா புயல் மணிக்கு 23 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஓங்கோல் மற்றும் சென்னைக்கு இடையில் நாளை கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் நாளை 12ஆம் தேதி இரவு 11 மணி வரை வட தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் முதல் பழவேற்காடு வரை பேரலைகள் 10 முதல் 12 அடி உயரத்திற்கும் , தென் தமிழ்நாட்டில் கீழக்கரை முதல் குளச்சல் வரை 8 முதல் 9 அடி உயரத்திற்கும் பேரலைகள் இருக்கும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.