News Saturday, December 10, 2016 - 11:22
Submitted by rameswaram on Sat, 2016-12-10 11:22
Select District:
News Items:
Regional Description:
கடல் ஆமை ஊர்ந்து செல்லும் "டெஸ்டுடைன்' எனும் பிரிவைச் சேர்ந்தவை. ஆமைகள் கடலில் வாழ்பவையானாலும், கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரைகூட உயிர் வாழும். ஆமைகளை,உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன. பேராமை (leatherback) என்ற கடல் ஆமை 540 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டது. கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். இவற்றில் சில இனங்கள் அழிவாய்ப்பை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது. பொதுவாக உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. அதன் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக அமைகிறது