News Thursday, November 22, 2018 - 11:17
Submitted by pondi on Thu, 2018-11-22 11:17
Select District:
News Items:
Description:
Strong air pressure is formed in the Bank of Bengal. Tidal wave: Tidal waves 6-9 feet 21.11.2018 From 5.30 am to 23.11.2018 night till 11.30 pm from Pulicatva to Kolachal. Sea top speed is at speeds of 87-102 cm per second. Strong wind warning 21.11.2018: Rainfall winds can cause heavy rainfall and heavy rainfall in Tamil Nadu and Puducherry coastal districts in Tamil Nadu and Puducherry coastal districts in Tamil Nadu, Puducherry, Tamil Nadu and Puducherry. . Fishermen warning: The sea is very tough. Therefore, it is advisable not to go fishing in the next 24 hours for Tamil Nadu, Puducherry, South West Bengal and Mannar Gulf
Regional Description:
வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. பேரலை எச்சரிச்கை : பேரலைகள் 6-9 அடி உயரத்தில் 21.11.2018 5.30 மணி முதல் 23.11.2018 இரவு 11.30 மணி வரை பழவேற்காடு முதல் குளச்சல் வரை காணப்படும். கடல் மேல்மட்ட வெப்ப நிலை வேகம் வினாடிக்கு 87-102 செ .மீ வேகத்தில் இருக்கும். பலத்த காற்று எச்சரிக்கை 21.11.2018: இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடலையொட்டிய தமிழ்நாடு, புதுச்சேரி, தென் ஆந்திரா மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும் மழை எச்சரிக்கை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை : கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே தமிழ்நாடு ,புதுச்சேரி ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்