News Thursday, December 8, 2016 - 07:03
Submitted by pondi on Thu, 2016-12-08 07:03
Select District:
News Items:
Description:
The lower zone of low pressure in the Bay of Bengal to the south-east area is evolving. 1,180 km from Visakhapatnam, it is centered in the South East. The system moved northwest in the direction of increasing, in the next 24 hours and intense pressure becomes lower zone. Kasparov also stronger, deeper zone in the next 24 hours (tomorrow, 8:30 pm) is a storm. As a result, in the next 24 hours, the Andaman and Nicobar islands, very heavy rains in some places. Andaman Island and the North Sea regions bordering Andhra Pradesh, the sea is too rough. Therefore, the fishermen do not go out to sea. In the southern coastal areas of Tamil Nadu in the upper layer of the atmosphere is brewing cycle. As a result, in Tamil Nadu and Puducherry today (Thursday) with moderate rain in some places.
Regional Description:
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அது விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 1,180 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. அந்த மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் (நாளை காலை 8.30 மணிக்குள்) புயலாக மாறுகிறது. இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்தில், அந்தமான்–நிகோபார் தீவுகளின் சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.