You are here
Disaster Alerts 05/11/2018
State:
Tamil Nadu
Message:
மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை : 5.11.2018
தெற்கு வங்க கடல் பகுதியின் மத்திய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் கன்னியாகுமரி பகுதிக்கு வருகின்ற நவம்பர் 6-8தேதிகளில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 30-40 கி .மீ வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 50கி .மீ வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய கன்னியாகுமரி , மன்னார் வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நவம்பர் 6,7,8 தேதிகளில் வீசக்கூடும். இதன் காரணமாக மேற்சொன்ன பகுதிகளில் கடல் சீற்றத்துடனும் சில இடங்களில் மிக சீற்றத்துடனும் காணப்படும். எனவே மீனவர்கள் வருகின்ற நவம்பர் 6 -7 ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிக்கும், மேலும் நவம்பர் 7-8 தேதிகளில் கன்னியாகுமரி , மன்னார் வளைகுடா அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்சொன்ன பகுதிகளுக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: