News Friday, June 10, 2016 - 12:15

Select District: 
News Items: 
Description: 
All cell phone 'Emergency Button' Federal Government Action directive The protection of women Widely across the country, especially sexual offenses, crimes against women are increasing. In that respect, the New Year (January, 1st, 2017) will go on sale first in all celponkalilum 'Emergency Button' feature that should be made mandatory for the central government ordered telecom.
Regional Description: 
எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ மத்திய அரசு அதிரடி உத்தரவு ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு நாடு முழுவதும் பரவலாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த தருணத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில் எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், ஆபத்திலும் பெண்கள் செல்போன் மூலம் போலீசை எளிதாக தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியை நாடும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு விரும்பியது. அந்த வகையில், புத்தாண்டு (ஜனவரி, 1-ந்தேதி, 2017) முதல் விற்பனைக்கு வரும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டது.