News Saturday, December 3, 2016 - 09:59
Submitted by pondi on Sat, 2016-12-03 09:59
Select District:
News Items:
Description:
Indian Space Research Organisation (ISRO), the global study, getting telepathic messages, marine research, communication and weather satellites, designed for various jobs, including the use of space is paid. Chad already in 2003 for the study of Earth Resource 1, 2011 Resource Chad -2 satellites are launched to the skies. This satellite is currently 3rd with 1,235 kg -2 Chad A. Resource is crafted. It pieselvi -36 C to launch rocket is payable. This 38th pieselvi Is a rocket. Pieselvi -36 C Resource cat 2A rocket on satellites 7 (Wednesday) morning at 10.24 Satish Dhawan Space Research Centre at Sriharikota at ISRO is planning to launch the first is from evutalat. From the Earth to the satellite while in orbit at an altitude of 817 km. The natural resources of the 3 cameras installed in different angles to shoot accurately. The life time of 5 years. ISRO is actively engaged in these tasks
Regional Description:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி ஆய்வு, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. புவி ஆய்வுக்காக ஏற்கனவே 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1, 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது 38-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ் சாட்- 2ஏ செயற்கைகோள் 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள். இந்த பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.