News Thursday, December 1, 2016 - 14:06
Submitted by rameswaram on Thu, 2016-12-01 14:05
Select District:
News Items:
Regional Description:
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான “நாடா” புயல் மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்னைக்கு தென் கிழக்கில் 330 கி.மீ., தொலைவிலும் மற்றும் புதுச்சேரியிலிருந்து 270 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டு இருக்கின்றது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் படிபடியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே டிசம்பர் 2, அன்று கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 45 -55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அலையின் உயரம்06 முதல் 08 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.