Government Schemes- Monday, March 30, 2020 - 16:58

Regional Title: 
கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் உட்பொருத்தும் / வெளிப்பொருத்தும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குதல்
Description: 
2017-18ஆம் ஆண்டு முதல் வெளிப் பொருத்தும்/ உட்பொருத்தும் இயந்திரம் மற்றும் வலைகளின் விலையில் அலகு ஒன்றிற்கு 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.60,000/- மானியமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவர்களை அணுகவும்
Regional Title: 
மீனவர்களால் மீன்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படும் அதிவேக டீசல் எரியெண்ணெய்க்கு விற்பனைவரி விலக்கு அளித்தல்
Description: 
கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப்படகிற்கு மீன்பிடித் தடைக்காலம் நீங்கலாக ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் வழங்கப்படுகிறது. இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 4000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வழங்கப்படுகிறது.
State: