News Saturday, November 5, 2016 - 10:42
Submitted by pondi on Sat, 2016-11-05 10:42
Select District:
News Items:
Description:
Large particles from the sun all day long, rays toward Earth are emerging. From the particles, radiation from the earth, protects kantappulankaltan. A few particles of which the first 2 thousand kilometers to 500 kilometers per second, travel to reach Earth. The reason for this is that we have analyzed. The explosion occurred when the solar storm was due to the Earth's magnetosphere. -3 Grapes Muon telescope Greater ray burst is detected. Magmatic eruption lasting about 2 hours, and 40 of nano-particles from the sun exposed minnarrappatta Tesla (radiation levels) than coming to earth. In other cases, it may be 2 to 3 Tesla nanotechnology. When these particles reach Earth, the higher the number, after colliding with the Earth's magnetic field to produce electricity. Also cause havoc with power stations exploding, satellites, electronic devices will be damaged severely. May become extinct as a result of our technologies
Regional Description:
சூரியனிடம் இருந்து நாள்தோறும் ஏராளமான துகள்கள், கதிர்கள் வெளிப்பட்டு பூமியை நோக்கி வருகின்றன. இந்த துகள்களிடம் இருந்தும், கதிர்களிடம் இருந்தும் பூமியை, காந்தப்புலங்கள்தான் பாதுகாக்கிறது. இதில் ஒரு சில துகள்கள் வினாடிக்கு 500 கிலோ மீட்டர் முதல் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து பூமியை வந்தடைகிறது. 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் 22–ந் தேதி நள்ளிரவில் பூமிக்கு வந்த காஸ்மிக் கதிர்களின் அளவு 0.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்ந்தது. இதற்கான காரணம் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது சூரிய புயல் காரணமாக பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. கிரேப்ஸ்–3 மியோன் என்ற தொலைநோக்கி மூலம் அகண்ட கதிர் வெடிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த காந்தப்புல வெடிப்பால், சூரியனிடமிருந்து வெளிப்படும் மின்னாற்றப்பட்ட துகள்கள் 40 நனோ டெஸ்லா (கதிர்வீச்சு அளவு) அளவிற்கு பூமிக்கு வந்துள்ளன. இது மற்ற நேரங்களில் 2 முதல் 3 நனோ டெஸ்லாவாக இருக்கும். இதுபோன்ற துகள்கள் அதிக எண்ணிக்கையில் பூமியை வந்தடையும் போது, பூமியின் காந்தப்புலத்தோடு மோதி மின்சாரத்தை உற்பத்தி செய்யும். பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காஸ்மிக் கதிர்வீச்சு அளவு அதிகரித்து, இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் பூமியில் நாம் அமைத்து உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களும் வெடித்து அழிவை ஏற்படுத்துவதோடு, செயற்கை கோள்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பலத்த சேதமடையும். இதனால் நமது தொழில்நுட்பங்கள் அழியும் நிலை ஏற்படலாம்