News Thursday, October 27, 2016 - 13:07
Submitted by pondi on Thu, 2016-10-27 13:07
Select District:
News Items:
Description:
Bengal gram threatened Kasparov zone, has become the storm. Which means crocodile, 'kiyant' The storm, Oct., 28, 29 In Andhra Pradesh crossing the border, as predicted. In the Bay of Bengal to the south-eastern part of India, a week ago, two pressure cycles formed the top tier. These two days ago, Kasparov became the zone. They turned the storm, which hit Myanmar, as expected. But, Myanmar, near the'b' in the form, has returned to India. Orissa and Andhra Pradesh is moving towards waters. The'MON' in the Burmese language, kiyant, as labeled. 'The crocodile meaningful Batabanó, Oct., 28 In Andhra Pradesh, Visakhapatnam near the border crossing, "the Indian Meteorological Center said. But the American army, the Indian and the Pacific Ocean to the Combined Storm Warning Center warned otherwise. Diwali day, Oct., 29, From Chennai, 300 km, remote in Ongole, kiyant predicted to cross the coast. The storm, the India Meteorological Center issued a notice: In the Bay of Bengal, the Andaman, 620 kms north; In the North West, from Gopalpur in Orissa, 710 km, south; In the South East, from Visakhapatnam, 850 km to the east, "kiyant" storm centers. Andhra Pradesh and Orissa coast, fishermen do not want to go into the sea. In the Bay of Bengal, Andhra Pradesh on the east coast, from tomorrow, the wind speed, 100 km, will be on the pace. Tomorrow, AP ocean passage storm, Oct., 28 In Visakhapatnam katakkalamivvaru meteorological reports through the stain. "If this storm, Chennai, Pondicherry on the east coast, it is only possible to light rain as Chennai, IMD
Regional Description:
வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. முதலை என்ற பொருள்படும், 'கியான்ட்' என்ற இந்த புயல், அக்., 28, 29ல், ஆந்திராவில் கரை கடக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் இந்தியாவுக்கு தென் கிழக்கு பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், இரண்டு காற்றழுத்த மேல் அடுக்கு சுழற்சிகள் உருவாகின. இவை, இரு தினங்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறின. இவை, புயலாக மாறி, மியான்மரை தாக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியான்மர் அருகே, 'ப' வடிவில், இந்தியாவை நோக்கி திரும்பி விட்டது. ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கு, 'மொன்' என்ற பர்மிய மொழியில், கியான்ட் என, பெயரிடப்பட்டுள்ளது. 'முதலை என்ற அர்த்தமுள்ள இப்புயல், அக்.,28ல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க ராணுவத்தின், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கான ஒருங்கிணைந்த புயல் எச்சரிக்கை மையம், வேறு விதமாக எச்சரித்துள்ளது. தீபாவளி நாளான, அக்.,29ல், சென்னையில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் உள்ள ஓங்கோலில், கியான்ட் கரை கடக்கலாம் என கணித்துள்ளது வங்க கடலில், அந்தமானில் இருந்து, 620 கி.மீ., வடக்கு; வட மேற்கில், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து, 710 கி.மீ., தெற்கு; தென் கிழக்கில், விசாகப்பட்டினத்தில் இருந்து, 850 கி.மீ., கிழக்கில், 'கியான்ட்' புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். வங்க கடலில், ஆந்திராவுக்கு கிழக்கு கடற்பகுதியில், நாளை முதல் காற்றின் வேகம், 100 கி.மீ., வேகத்தில் இருக்கும். நாளை, ஆந்திரா கடல் பகுதிக்குள் நுழையும் புயல், அக்., 28ல் விசாகப்பட்டினம் வழியே கரையை கடக்கலாம்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது