News Monday, May 9, 2016 - 11:49
Submitted by pondi on Mon, 2016-05-09 11:49
Select District:
News Items:
Description:
Putankol sun's diameter will pass the event: 45 years of going on the air tomorrow. Sun, Mercury, Earth in a straight line to meet the rare astronomical event on Monday (May 9) in 1970 before nataiperukiratuitarku nataiperratuatutta event will be held in 2095. Sun, Mercury, Earth, Mercury interception is that the event will meet on the same straight line. Mercury being closer to the Sun, a fast round, Wednesday to cover, occurring more frequently than vellikkol cover. So on the face of the sun during the slip cover putankol Wednesday, appears to move. However, it appears that small solar mole. Kutty Wednesday, with the right tools patuttip greater details, the move will be even better. Interception Wednesday 13-14 times in a century nikalkiratuatutta Interception Wednesday, will take place on November 11 2019. But we can not see it. Visible in North America. Then the Americans will have to wait until next year, Mercury itaimaraippaikkana th 2049 .. Wonder how nikalvaipparppatu May in India. From 4.40 pm to 6.30 pm on the evening of the 9 th see. If you do not see with the naked eye between Mercury picket the event.
Regional Description:
புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப்பின் நாளை வானில் நடக்கிறது. சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை(மே- 9) நடைபெறுகிறது.இதற்கு முன் 1970 -ல் நடைபெற்றது.அடுத்த நிகழ்வு 2095 ல் நடைபெறவுள்ளது. சூரியன், புதன் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வை புதன் இடைமறிப்பு என்றும் கூறலாம். புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெகு வேகமாகச் சுற்றுவதாலும், புதன் மறைப்பு என்பது, வெள்ளிக்கோள் மறைப்பை விட அடிக்கடி நிகழும். புதன்கோள் மறைப்பின் போது புதன் சூரிய முகத்தில் அப்படியே நழுவி, நகர்ந்து செல்வது தெரியும். ஆனாலும், சின்ன சூரிய மச்சம் போல் தெரியும். குட்டி புதனை, சரியான கருவிகள் கொண்டு பெரிது படுத்திப் பார்த்தால், நகர்வு இன்னும் சிறப்பாக இருக்கும். புதன் இடைமறிப்பு ஒரு நூற்றாண்டில் 13-14 முறை நிகழ்கிறது.அடுத்த புதன் இடைமறிப்பு, 2019 நவம்பர் 11 -ல் நடக்கவுள்ளது. ஆனால் நாம் அதைப் பார்க்க முடியாது. வட அமெரிக்காவில் தெரியும். அதன் பின்னர் அமெரிக்கர்கள் அடுத்த புதன் கோள் இடைமறைப்பைக்காண 2049 -ஆம் ஆண்டு வரைக் காத்திருக்க வேண்டும்.இந்த அதிசய நிகழ்வைப்பார்ப்பது எப்படி.. இந்தியாவில் மே. 9 -ஆம் தேதி மாலை 4.40 மணி முதல் 6.30 மணி வரை பார்க்கலாம். புதன் கோள் இடை மறிப்பு நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது