தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 15.3.2018 வரை தென் தமிழகம் மற்றும் குமரி கடற்கரை பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ . வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் அலையின் உயரம் 7-9 அடி உயரத்தில் காணப்படும். கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 77-88 செ.மீ அளவு இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் குமரி மற்றும் இலட்சத்தீவு பகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.