News Saturday, October 22, 2016 - 09:06

Select District: 
News Items: 
Description: 
Tamil Nadu, there is no impact to the lower zone of the low pressure. However, in some places in the southern districts of Tamil Nadu today (Saturday) after the late rain peyyuminta low pressure zone of the lower end of the southwest monsoon in Tamil Nadu. Till October 27 at the onset of northeast monsoon did not have a chance.
Regional Description: 
மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு வடமேற்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் (2 நாட்களில்) புயலாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இருப்பினும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும்.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மறைந்த பின்னர்தான் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடையும். 27–ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை