News Monday, May 2, 2016 - 12:41

News Items: 
Description: 
Government Arts and Science Colleges Application distribution of admission starts from Monday. Student enrollment was completed in the first week of June, the date of June 16th, there are classes begin. Government of Tamil Nadu in the arts, science colleges 201617am academic admissions application from the date of distribution is to be launched on May 2nd. The application fee is Rs. 25, registration fee of Rs. 2, a total of Rs. 27 payment, the application can be obtained
Regional Description: 
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி, விண்ணப்பத்தைப் பெறலாம். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் சேர்க்கையும் நடத்திமுடிக்கப்பட்டது