News Thursday, April 21, 2016 - 11:28

News Items: 
Description: 
India in the year 2014 on March 27 and was certified polio-free country by the World Health Organization. Puducherry since 1998, the last polio epidemic in the state does not influence the case. Maintain the well-being of women and children and execution of its health services, intensive monitoring efforts, the state is the precursor to India, Pondicherry State. Pondicherry Government nalavalitturai on behalf of the worldwide polio extirpation and to end the policy as part of the children against polio virus type 1, 2 and 3 from twice Care to ensure the polio vaccine routine immunization program today (Thursday) The first is to introduce. The polio vaccine, a child born on the 6th and 14th week of the cast. Also present will continue to provide oral polio vaccine. Today is the first polio vaccine to children that are put into the health director, Raman said.
Regional Description: 
கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி இந்தியா போலியோ இல்லாத நாடு என உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த 1998-ம் ஆண்டிலிருந்தே போலியோ நோய் தாக்கம் இல்லை. மகளிர் மற்றும் குழந்தைகள் நலனை பேணுவதிலும் தன்னுடைய சுகாதார பணிகளை செயல்படுத்துவதிலும், தீவிர கண்காணிப்பு முயற்சியிலும் புதுவை மாநிலம் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. புதுவை சுகாதாரத்துறை அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் மட்டுமின்றி எல்லா கிராமங்களிலும் வழக்கமான தடுப்பூசி முகாம் மற்றும் இந்திர தனுஷ் முகாம்களை நடத்துவதன் மூலம் வீட்டு வாசலுக்கே சென்று ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது. புதுவை அரசு நலவழித்துறை சார்பில் உலகளவில் போலியோ நோயை வேரோடு அழித்தல் மற்றும் முடிவுக்கு கொண்டுவரும் கொள்கையின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் வகை 1, 2 மற்றும் 3-ல் இருந்து இருமடங்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய போலியோ தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி போலியோ தடுப்பூசி குழந்தை பிறந்த 6-வது மற்றும் 14-வது வாரத்தில் போடப்படும். மேலும் தற்போது வாய்வழியாக போலியோ சொட்டு மருந்து வழங்குவதும் தொடரும். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்தார்