News Sunday, October 9, 2016 - 11:38

Select District: 
News Items: 
Description: 
At the southern end of the peninsula of the southwest monsoon usually late May or early June to 3 months will give you water. This is to a large part of India brings significant rainfall. Accordingly, this year in the state of South-West monsoon began in June. In Tamil Nadu, the southwest monsoon shower curtain as the area is minimal. The state will receive the normal amount of rainfall during the southwest monsoon season is usually 32 cm Is. Vilakkappatuvatarkul northeast monsoon of the southwest monsoon begins. Currently, Haryana, Rajasthan, Punjab, near the crossing of the southwest monsoon to recede gradually decreased. That was the beginning of the northeast monsoon.
Regional Description: 
தென்மேற்கு பருவமழை காலம் பொதுவாக தீபகற்பத்தின் தென் கோடியில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் தொடக்கத்திலோ தொடங்கி 3 மாதங்களுக்கு மழையை கொடுக்கும். இது தான் இந்தியாவின் பெரும் பகுதிக்கு கணிசமான மழையை தரக்கூடியது. அந்தவகையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கியது. மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே இருக்கும். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 32 செ.மீ. ஆகும். தென்மேற்கு பருவமழை காலம் விலக்கப்படுவதற்குள் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிடும். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் 20-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. தற்போது அரியானா, பஞ்சாப்பை கடந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து ராஜஸ்தான் மாநிலம் அருகே பின்வாங்குகிறது. தென்மேற்கு பருவமழை முடிவில், மத்திய இந்தியாவில் உயர் அழுத்த காற்று சுழற்சி உருவாகி வங்க கடல் பகுதியில் திரளான மேகக்கூட்டங்களுடன் வந்து மழையை கொடுக்கும். அதுவே வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு