7.12.2017 மாலை 5.30 மணி முதல் 9.12.2017 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலும், வட தமிழகத்தில் பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை கடல் பெருக்கம் 5-6 அடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 68-75 செ.மீ அளவு இருக்கும். கடல்பெருக்கு மற்றும் பெரு ஓதம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவின் காரணமாக தமிழகத்தின் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் பெருக வாய்ப்புள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி வீசக்கூடும். எனவே மீனவர்கள் வரும் 9 ஆம் தேதி வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.