நேற்று குமரி பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஒக்கி புயலாக மாறியுள்ளது .இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் லட்சத்தீவை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ,தமிழகம் , தென் கேரளம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். பலமான காற்று மணிக்கு 65-75 கி .மீ வேகத்தில் கன்னியாகுமாரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடற்பகுதிகளில் வீசக்கூடும். கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக பகுதியில் கடல் அலை 10-15 அடி உயரத்திற்கு காணப்படும். கடல் நீரோட்டம் நிமிடத்திற்கு 69-112 செ.மீ வேகத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்