News Sunday, September 25, 2016 - 11:15

Select District: 
News Items: 
Description: 
Indian Space Research Organisation (ISRO) satellites, launching them to fire pieselvi And jieselvi Varukiratutotarntu two rockets were produced in marine research, communication and weather satellites ISRO for the use of a variety of designs has been paying them successfully in space. The satellite and space research center catistavan Sriharikota in Andhra Pradesh from the first evutalat pieselvi Rocket -35 C by tomorrow (Monday) morning skies launched at 9.12. This launch is the 37th ISRO rocket. Sketcat -1 720 km from the Earth to the satellite while in orbit at an altitude of. Its lifespan is 5
Regional Description: 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சி, தகவல்தொடர்பு, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு விதமான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியும் வருகிறது. அந்த வகையில் கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிவதற்கும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்வது உள்பட பூமியை கண்காணிப்பதற்காக 377 கிலோ எடைகொண்ட ‘ஸ்கேட்சாட்-1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து இருக்கிறது. இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் நாளை (திங்கட்கிழமை) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ விண்ணில் செலுத்தும் 37-வது ராக்கெட் இது ஆகும். ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.