News Thursday, October 26, 2017 - 11:06
Submitted by pondi on Thu, 2017-10-26 11:06
Select District:
News Items:
Description:
The southwest monsoon is closing today (yesterday). The wind is starting to wind from the northeast direction. There is a favorable environment for the North-East monsoon. Within 48 hours (today or tomorrow) the Tamil Nadu and adjacent areas of south coastal Andhra, Rayalaseema, southern inner Karnataka and Kerala are likely to start northeast monsoon. Even tomorrow (today) is even more likely to start the northeast monsoon. The overlay cycle has occurred in the atmosphere of south-south Tamil Nadu. Because of this, rainfall or thunderstorm rains in the next 24 hours (today) in some places in Tamil Nadu and Puducherry. The sky is clouded with regard to Chennai. In some places of the city there is a possibility of rain. On the 27th of the coming day (tomorrow) in some places in Tamil Nadu will rain. Similarly, there is a possibility of heavy rainfall in some places on 28th.
Regional Description:
தென்மேற்கு பருவமழை காலம் இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் (இன்று அல்லது நாளை) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. நாளை (இன்று) கூட வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வருகிற 27–ந் தேதி (நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், 28–ந் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.