News Wednesday, October 25, 2017 - 12:08
Submitted by pondi on Wed, 2017-10-25 12:08
Select District:
News Items:
Description:
According to a press release issued by the Tiruvallur District Collectorate yesterday,
"IAS and IPS are also trained to take part in the competition for fishermen graduates. This training program will be held jointly with the Department of Minorities and Chennai Anna. Therefore, sea and domestic fishermen cooperative societies and children of fishermen welfare board may be trained together. "
Applicants must have a degree in recognized university. The age limit for applying is 21-35. 42. Application form can be downloaded from www.fisheries.tn.gov.in or can be obtained at District Fisheries Assistant Director, Fisheries Assistant Director Office No. 11, Tiruvottiyur High Road, Ponneri-601 204. Applications should be completed by October 25th. For more details contact 044-27972457
It is noteworthy that young fishermen currently in the work may apply for this training.
Regional Description:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“மீனவப் பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் இணைந்து இந்தப் பயிற்சி திட்டத்தை நடத்தவுள்ளது. எனவே, கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 42. விண்ணப்பப் படிவத்தை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி - 601 204 முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27972457 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
தற்போது பணியில் இருக்கும் மீனவப் பட்டதாரி இளைஞர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.