News Monday, September 19, 2016 - 06:22
Submitted by pondi on Mon, 2016-09-19 06:22
Select District:
News Items:
Description:
All universities, kalluarikalum, students of the diploma, Aadhaar number, the central government's website to book imperative that, uttaravitappattullatuanaittu Universities, College, students of the degree certificates, mark sheets, the central government, "the National Academic Depository 'organization, the website should be made. Students must take place in the Aadhaar number. Canritalkalilum, to try to specify the Aadhaar number, uttaravitappattullatuinta efforts, employment agencies, government departments will choose the competition, banks and educational institutions, students' certificates, will be able to check in online. To put an end to the problem of fake certificates, higher education officials
Regional Description:
அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.