News Wednesday, September 14, 2016 - 05:45
Submitted by pondi on Wed, 2016-09-14 05:45
Select District:
News Items:
Description:
4 days of the filing of the passport (passport), a new scheme has been introduced. Anyone applying for Aadhar card, voter card, pan card, the three documents I-anekscar (I-ayynsnln) linked to four days to get a passport. Asport received canrayvu carried out with the police. Tatkal the Indian passport from the project, which is the opposite of the passport required applicants quicker police canrayvu tends to get "mobile police of the new processor will be introduced. India already three states plan has been implemented. It's currently in the state to launch state government approval is provided." Mobile Police App ' the processor being attested by the police officers, the police will issue passports to applicants. The availability of this new processor, the time is greatly reduced by the police attestation. The project of a month in Chennai, Villupuram, Cuddalore Road Districts ô introduced on a trial basis. 280 e-service centers in the State applying for a passport at the facility has been implemented via the Internet. The project implemented in rural areas, where people can easily obtain the passport. Passport applicants for a period of 19 days to verify the certificate has been reduced to 2 days. The next day, they are invited to apply for the certificate of verification.
Regional Description:
விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்சர் (ஐ-அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். ாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். தத்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறானது பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக "மொபைல் போலீஸ் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. "மொபைல் போலீஸ் ஆப்' என்ற செயலியின் மூலம் காவல் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல் துறை சான்றொப்பம் வழங்குவார்கள். இந்த புதிய செயலியின் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்தத் திட்டம் ஒருமாத காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுôர் ஆகிய மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவை மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள்.