News Monday, September 12, 2016 - 10:09

Select District: 
News Items: 
Description: 
Plastic paikalukkut ban went into effect on Oct. 2. This procedure will come into effect on October 2, announced that the Union Tourism Ministry. 'Purity of India' as part of the project said that this initiative forward. Currently the most widely used plastic bags to the environment are a major challenge. It would be less than the specified micron polythene material is not biodegradable. Can not recycle them. Plastic bags are concentrated in the area, the underground water level decreases. Affects soil fertility. Moreover, there are increasing instances of cattle dying them. Eliminate the use of plastic bags, which is a threat to the overall culaliyalukke Federal Government has taken various measures. To the extent of less than 50 micron plastic bags were banned recently. No further action by the government has decided to ban their use in tourist destinations
Regional Description: 
பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல். இந்த நடைமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. குறிப்பிட்ட மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பாலித்தீன் பொருள்களுக்கு மக்கும் தன்மை இல்லை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் பாதிக்கிறது. மேலும், கால்நடைகள் அவற்றை உண்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த சூழலியலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது