News Monday, June 12, 2017 - 10:38
Submitted by pondi on Mon, 2017-06-12 10:38
Select District:
News Items:
Description:
Nutrients found in fish
Fish is full of all kinds of nutrients necessary for man. Specifically include vitamin A and vitamin D, phosphorus, magnesium, selenium, and iodine. We know that most of the proteins in the diet are rich in omega-3, omega-6 and omega-9 fatty acids that are not easily digested. More amino acids that are more digestible than other meat foods are found in fish more than other foods. So the prescriptions suggest that fish can be eaten by small children and adults. Each type of fish is found in every type of nutrient but fatty acids that are not completed in all types of fish are found. Especially in white fish, liver contains omega-3 fatty acids. It is noteworthy that red meat contains omega-3 fatty acid throughout the body. These unsaturated fatty acids have the ability to reduce cholesterol levels in the blood, thus reducing the risk of blood vessel, blood pressure, and cardiovascular disease. Iodine is found in iodine nutrient fish that can prevent the collapse of the neck before it is low. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let's meet again with useful information.
Regional Description:
மீன்களில் காணப்படும் சத்துகள்
மீன்களில் மனிதனுக்கு தேவையான அனைத்து வகையான சத்துப்பொருட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி ,பாஸ்பரஸ் , மக்னீசியம்,செலினீயம், மற்றும் அயாடின், ஆகியவை அடங்கியுள்ளன. .மீன்களில் அதிகளவில் புரதச்சத்துகள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே குறிப்பாக எளிதில் செரிமானம் நடைப்பெறக் கூடிய நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஓமேகா 3 ,ஓமேகா 6, ஓமேகா 9 ஆகிய அமிலங்கள் நிறைந்துள்ளன. மற்ற மாமிச உணவுகளை விட எளிதில் செரிமானம் தரக்கூடிய அமினோ அமிலங்கள் மற்ற உணவுகளை விட மீன்களில் தான் அதிகமாக காணப்படுகிறது. எனவே மீன் உணவை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சாப்பிடலாம் என மருந்துவர்கள் பரிந்துரை செய்கியார்கள். ஒவ்வொரு வகை மீன்களிலும் ஒவ்வொரு வகையான சத்துகள் காணப்படுகின்றன ஆனால் எல்லா வகை மீன்களிலும் நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெள்ளை சதைவுடைய மீன்களில் கல்லீரலில் மட்டும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. சிவப்பு சதைவுடைய மீன்களில் சதை முழுவதும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் இரத்திலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது இதனால் மீன் சாப்பிடுவர்களுக்கு இரத்தக் குழாய் அடைப்பு , இரத்தக் கொதிப்பு, மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைந்து காணப்படுகிறது. அயாடின் குறைவால் ஏற்படும் முன் கழுத்து கழலை நோய் வராமல் தடுக்கக்கூடிய தேவையான அயோடின் சத்து மீன்களில் காணப்படுகிறது. இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.