News Tuesday, August 9, 2016 - 09:42

Select District: 
News Items: 
Description: 
Application invited for non organized institute for educational fund. last date on application september 30th 2016
Regional Description: 
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தில் கடந்த மே மாதம் வரை பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சிக்ஷா சகயோக் யோஜனா திட்டத்தின் கீழ், 2016-17ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை 1,200 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள், ஐ.டி.ஐ., பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்திலும், காரைக்காலில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் காரைக்கால் அமைப்பு சாரா தொழிலாளர் அலுவலத்திலும் சமர்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வருவாய்த் துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழையும் இணைத்து சமர்பிக்க வேண்டும். இவ்வாறு புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் கூறியுள்ளார்